கடந்த வாரம் கூகள் நிறுவனம் ஒரு சிறிய நிறுவனத்தை 3.2
பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. இது தகவல்
தொழில்நுட்பத்
துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம், வீட்டினுள் இருக்கும் தட்பவெட்ப நிலை போன்றவற்றை அறிவிக்கும் இரண்டு அங்குல விட்டமே இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும் நெஸ்ட் (Nest) என்ற நிறுவனத்தை மிக மிக அதிக விலை கொடுத்து ரொக்கமாகக் (திருடா திருடா படத்தில் வரும் லாரியை நினைவில் கொள்ளவும்)
கொடுத்து வாங்கியது. TechTamil Karthi
வீட்டில் தீப்பிடித்தால் எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்
ஆள் நடமாட்டம் இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச்
செய்யும் இந்தப் பெட்டியை கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல சர்ச்சைகளை
ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க புலனாய்வு நிறுவனம் அனைத்து பெரிய தகவல்
தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து அதன் அனைத்து பயனாளர் விவரங்களை
உளவு பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம் வீட்டை
கண்காணிக்கும் ஒரு பொருளை நம் வீடுகளில் (இப்பொழுதைக்கு
அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது அமெரிக்க புலனாய்வு நிறுவனம் மறைமுகமாக யார் எந்த வீட்டில்
எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை நாளாக வீட்டில் இல்லை போன்ற விவரங்களை
சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால் தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே
இல்லாமல் போய் விடும் என கருத்து தெரிவிகிறார்கள்.
{ 0 comments... read them below or add one }
Post a Comment