Monday, 21 April 2014

விண்டோஸ் 8.1 இயங்குதளத்துடன் வெளிவரும் Nokia Lumia 1520


Specifications-of-NOKIA-LUMIA-1520
கணினிகளுக்கு புதிய இயங்குதளத்தினை வெளியிட்டுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் பிறகு ஸ்மார்ட் போன்களிலும் புதிய இயங்குதளமான 8.1 அறிமுகம் செய்திருந்தது.
Nokia Lumia 1520 ஸ்மார்ட்போனில் இப்புதிய இயங்குதளம் செயல்படகிறது. இது ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணங்களில் வெளிவரவுள்ளது. Nokia Lumia 1520 Smartphone Specifications பார்க்கலாம்.
புதியதாக வெளிவரவுள்ள இப்போனில் 6 அங்குல தொடுதிரை, Quad-Core Snapdragon 800 Processor, முதன்மை நினைவாக 2GB RAM, 16 GB சேமிப்பு நினைவகமும் பெற்றுள்ளன.
வீடியோ, போட்டோக்கள் எடுக்க 20 மெகா பிக்சல் கேமராவும் இணைந்துள்ளது.

Specifications of NOKIA LUMIA 1520

  • 6 Inch 1080p Display
  • 2.2 GHz Snapdragon Qualcomm 800 Quad Core Processor
  • 2GB RAM
  • 32 GB On-Board Storage
  • 20MP Carl Zeiss Pureview Camera
  • 1.2 MP Front Facing Camera
  • Dual LED Flash
  • 3400 MAh Battery
Sunday, 20 April 2014

பாராட்டுவதா பொறாமைப்படுவதா கேரளாவைப் பார்த்து? அமெரிக்கா செல்லும் மாணவர்கள்.


ஜனவரி 30 அன்று முதல் ஒரு போட்டி கல்லூரி, பள்ளி மாணவர்கள் மத்தியில் கேரளா முழுவதும் மாநில அரசின் துணையுடன் நடத்தப்படுகிறது.
மாணாவர்கள் தங்களின் IT சார்ந்த புதுமையான யோசனைகளை ( ஒரு வித்தியாசமான இணைய தளம், மென்பொருள்… ) Youtube ல்  2-3 நிமிடங்கள் ஓடும் அளவில் ஏற்ற வேண்டும்.
சிறந்த யோசனைகளை ஏற்றிய முதல் ஐந்து மாணவர்கள் Facebook & Google நிறுவன உரிமையாளர்களை நேரில் San Fransisco சென்று பார்த்து அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவர்.
கேரள அரசின் உதவியுடன் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும், பொறாமையாகவும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு

கூகில் ஜீ மெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நிமிடங்களாக நிறுத்த பட்டுள்ளது.




ஜீமெயில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில மணி நேரம் பதிக்கப்பட்டுள்ளது.
ஜீமெயில்சேவையை  பயன் படுத்தி  டுவிட்டர் மற்றும் பல  சேவையை பயன்படுத்துவோர் அத்தனை பயன் படுத்த முடியாமல் தினருகின்றனார் . கூகில் தொடங்கிய Apps Status Dashboard – ல்  POSTINI என்ற சேவை மூலம் எந்த பதிப்பு வந்துள்ளது .

கூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்.


கூகள் எர்த் எனும் செயற்கைக்கோள் வழி புகைப்பட சேவையை கூகள் வழங்கி வருகிறது.
நாசா (நாராயண சாமி அல்ல) உதவியுடன் புவியின் கடந்த கால புகைப்படங்களை தொகுத்து அமேசான் காடு அழிக்கப்படுவதையும், நகரங்களில் கட்டிடங்கள் பெருகுவதையும், துபாயில் காதல் மீது பெரும் குடியிருப்பு கட்டப்படுவதையும் தொகுத்து வெளியிட்டுள்ளது.








Feel free to share these GIFs! More examples can be found on Google+.

அரசியல், சாதி மதம் பார்ப்பதில்லை தமிழனை அழிப்பவன்… அவனுக்கு என்றுமே நாம் தமிழன் தான்.


அன்பு நண்பர்களே வணக்கம்.,
இடையராத பணிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் உங்களின் உறவினர் குடும்பம் இரண்டு இருக்கிறது., ஒரு நாள் உங்கள் உறவினர் இல்லாத அனைத்து மக்களும் வீடு புகுந்து உங்கள் உறவுக்கார பெண்களை கற்பழித்து, குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்றால்..
மற்ற ஊர்களில் இருக்கும் உங்களின் உறவினர்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள்?
இது போன்ற ஒரு சம்பவம் நம்மில் பலரின் வாழ்வில் ஏற்பட்டிருக்காது.. ஆனால் இது தான் தமிழ் தாய் தங்கைகளின் நிலை இன்று இலங்கையில்.
ஒவ்வொரு குடும்பத்திலும் இருவர் போரில் பலி.
கர்நடக்கா, ஆந்திரா, கேரளா, இலங்கையில்  இவன் நாடாரா, செட்டியாரா எனப் பார்த்து அடிக்கவில்லை… இவன் இந்துவா, கிறிஸ்தவனா எனப் பார்த்து அடிக்கவில்லை… பிறர் நம்மைப் பார்ப்பது “தமிழன்” என்றுதான்…
தமிழன் தான் இலங்கையின் மூத்த குடிமக்கள்… வெள்ளையானைப் போல் 1500 ஆண்டுகள் முன்னர் வந்து குடியேரியவன் தான் சிங்களா.
தமிழ் ஈழம் என்ற நாடு தான் உலக அகதிகளாக இருக்கும் நம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தாய் நாடு.
நேதாஜி செய்தது தீவிரவாதம் தான் ஆங்கிலேயனுக்கு.
சத்தியாகிரக போராட்டங்கள் தோல்வி அடைந்த பின்னர் தான் 1977இல் ஆயுதம் எடுத்து தமிழர்கள் போராட்டம் செய்தனர்.
போர் 2009இல் முடிந்த பின்னரும் தினம் தினம் தமிழன், தமிழச்சி எனும் ஒரே காரணத்திற்கான வடக்கு, கிழக்கு மாகானங்களில் இருக்கும் மக்கள் கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.
நான் உங்களை போராட்டத்ிர்க்கு வீதிக்கு இப்போது அழைக்கவில்லை..  மக்களை கொன்று குவித்த ராஜ பக்ஸெ ஒரு அறிக்கை தயார் செய்து இது தான் தமிழர்களுக்கான நிவாரணம் என LLRC என ஒன்றைத் தருகிறான். அதை ஐ நா முன் மொழிகிறது.
எப்படி கொலைகாரணுடன் ஒரே வீட்டில் வாழ முடியும்..
இணையத்தில் இந்த மணுவில் உங்களின் பெயரைப் பதிவு செய்யுங்கள்.  குறைந்தது 10 நபர்களையாவது இந்த மணுவில் பெயரைப் பதிவிடச் செய்யுங்கள்…
அரசியல் கட்சிகளை விமர்சிப்பதும், போராட்ட முறைகளை விமர்சிப்பதும் நம் நோக்கமாக இருக்க வேண்டாம். அங்கே சொந்த நாட்டிலேயே அடித்து விரட்டப்பட்டு தினமும் சித்திரவதை அனுபவிக்கும் மக்களுக்கு அமைதியை ஏற்படுத்த உதவுங்கள்.
இங்கே சென்று உங்களின் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
https://www.change.org/en-IN/petitions/conduct-referendum-for-tamil-eelam-in-sri-lanka-declare-freedom-of-tamil-eelam
Wednesday, 16 April 2014

இறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL


நம்மில் பலருக்கும் GMAIL சமீபத்தில் “Compose New Mail”  சாளரத்தில் ஏற்படுத்திய மாற்றம் பயன்படுத்த கடினமாக இருந்திருக்கும்.  Compose Mail என சொடுகினால்  சாட் செய்வது போன்ற ஒரு சிறிய பட்டியில் தட்டச்சு செய்யுமாறு அவர்கள் வடிவமைத்து இருந்தார்கள்.
gmail-full-screen-compose
இன்றுமுதல் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யும் சாளரம் முழு திரை அளவில்  தெரியும்.
இது பெரிய மற்றும் படங்களை உள்ளடக்கிய மின்னஞ்சல்களை அனுப்பும் பயணர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
படி 1:  “Compose” என்பதை சொடுக்கவும்.
படி 2:  வரும் சாளரத்தில்., குறுக்கு (Minimize), மூடு (Close)  ஆகிய பொத்தான்களின் நடுவே இருக்கும் விரிவாக்கு எனும் பொத்தானை அழுத்தவும்.
படி :3  இப்போது சாளரத்தின் வலது கீழ் மூலையில் (Bottom right corner)  இருக்கும் சிறிய முக்கோணக் குறியை அழுத்தவும்.
படி:4  அதில் இருக்கும் முதல் தேர்வு ” Default to full-screen ” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
இனிமேல் எப்போதும் உங்களால் முழுத் திரை அளவில் புதிய மின்னஞ்சல்களை தட்டச்சு செய்யலாம்.

கைப்பேசியில் நவீன மற்றும் பெரிய கேமரா லென்ஸ் பொருத்த சோனி முடிவுசெய்துள்ளது.



திறன்மிகு கைபேசிகள் (Smart phone) வந்த பின்னர் பலரும் தனியாக டிஜிடல் கேமரா வாங்குவது இல்லை. ஏற்கனவே சோர்ந்து போய் இருக்கும் கேமரா நிறுவனங்களை சொரிந்துவிடும் அறிவிப்பு ஒன்றை சோனி நிறுவனம் செய்துள்ளது.
NFC மற்றும் Wi-Fi தொழில்நுட்பத்தில் 20.2 மெகா பிக்ஸல் திரனுள்ள கேமரா லென்ஸ் பொருத்திய புதிய கைபேசிகளை அறிமுகம் செய்ய இருக்கிறது சோனி.
நோக்கியாவின் லுமியா 1020 கைபேசி அதிகத் தெளிவுடன் வந்துள்ளது.  பிலிம் ரோல் வித்து வந்த கோதாக் நிறுவனம் மூடு விழா கண்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அதாலால், பல கேமரா தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கைப்பேசியில் தங்களின் பொருள்களை எவ்வாறு புகுத்துவது  என ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
போனுக்கு கொண்டை வைத்தது போல் இருக்கும் இந்த கேமரா லென்ஸ் மக்களுக்குப் பிடிக்குமா என்பது சந்தைக்கு வந்த பின்னர் தான் தெரியும்.
sony-ext-lense

முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா?


முகம் கழுவிய பின் உள்ள முதல் வேலை மொபைல் அல்லது கணினி வழியாக முகநூல் பார்ப்பது என்றாகிவிட்டது. Twitter தளத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான Biz Stone , முகநூல் தளத்திற்கு அறிவுரை ஒன்றை சொல்லியுள்ளார்.
facebookkey
அதாவது., மாதா மாதம் $10 (Rs. 600) வாடகையாக கொடுத்து பயன்படுத்தும் சிறப்பு பயணர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமலும் (Ad Free) மேலும் பல புதிய வசதிகளுடன் அவர்களை Premium Members ஆக நடத்துமாறு சொல்லி இருக்கார். முகநூலின் 10 சதவீத பயணர்கள் இந்த வசதியை பயன்படுத்தினாலே மாதா மாதாம் முகநூலுக்கு ஒரு பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது நூறு மில்லியன். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) வாடகை கிடைக்கும்.
ஒரு வேலை அந்த சிறப்பு வசதிகள் பட்டியலில்., இவை இருந்தால் நன்றாக இருக்கும்
1. நமது ப்ரொஃபைல் பேஜ்ஐ யாரெல்லாம் பார்த்தார்கள் எனும் பட்டியல்.
2. குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பதிவுகள் நம் கண்ணில் படாதவாறு செய்தால் (சொம்பு, பவர் ஸ்டார்)
3. நமது பதிவுகளை எவரேனும் திருடி பதிவு செய்தால் அவரின் பதிவில் நம் பெயரை காட்டுதல்.
4. அனைத்து விளையாட்டு அழைப்புகளையும் தவிர்தல்.
5. போலிக் கணக்குகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்தல்.
6. தட்டச்சு செய்யும் பதிவு 66A இல் வருகிறதா இல்லையா எனக் கண்டறிதல்.
7. முன்னாடியே தட்டச்சு செய்து வைத்து குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் அதை பதிவு செய்தல்.
ஆனால் முகநூல் எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என அதன் முகப்பு பக்கத்தில் தற்போது எழுதியுள்ளது.
பார்ப்போம் என்ன நடக்கும் என்று.
உபரித் தகவல்:  Twitter இப்போது எப்படிடா லாபம் சம்பாதிப்பது என திணறிக் கொண்டு இருக்கிறது.
Tuesday, 15 April 2014

தொலைக்காட்சிப் பெட்டியில் Youtube பார்க்க…



அமெரிக்க வாசகர்களுக்கான சிறப்புச் செய்தி:
இணையத்தில் நாம் YouTube பார்ப்போம். அதே போல் WiFi மூலம் நமது தொலைக்காட்சிப் பெட்டியில் Youtube மற்றும் பல இணையதளங்களையும், முக்கியமாக காணொலி (Video)  சேவைகளை (Netflix) போன்றவற்றை பார்க்க கூகள் ChromeCast எனும் பென்ட்ரைவ் போன்ற ஒரு வன்பொருளை இந்த ஜூலை 28 தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
வெறும் $35  விலையில் வர இருக்கும் இந்த சாதனம் Roku , Apple TV போன்ற பிற Streaming சாதனங்களை விட மலிவாகக் கிடைக்க இருக்கிறது.
நீங்கள் வாங்கும் போது மூன்று மாத இலவச Netflix சந்தாவும் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த சாதனத்தை தொலைக்காட்சி மட்டும் அல்லாமல் பிற Laptop, Mac சாதனங்களிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.

முகநூலை தூக்கி எறியுங்கள், விக்கிப்பீடியாவில் எழுதுங்கள்.


wikipediatamil
முகநூல் பல புதிய தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது.  இலக்கிய நடையில் எழுதினால் தான் ஒருவர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக எழுதுவோர் அனைவரும் எழுத்தாளரே  எனும் சூழ்நிலை உள்ளது.
நிகழ்காலத்தில் அனைவருக்கும் பொதுவான அறிவுக் களஞ்சியமாக விளங்கும் நமது Wikipediaவில் உலகில் உள்ள பலரும் தத்தம் மொழியில் கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள்.
அதிக கட்டுரைகள் அடிப்படையில்.,
ஆங்கிலம், பிரஞ்சு, டச்சு மொழிகள் முதல் இடத்திலும்.
ஹிந்தி , சீனம், அரபி போன்ற மொழிகள் இரண்டாம் இடத்திலும்,
மலையாளம், மணிப்பூரி, கன்னடா, தமிழ் என நான்காம் இடத்திலும் மொழிகள் உள்ளன.
தமிழில் எழுதும் அன்பர்களை பாராட்டும் விதத்தில் ஒரு போட்டியும் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிக கட்டுரை எழுதும் அன்பரின் பெயர் மற்றும் புகைப்படம் தமிழ் விக்கி முதல் பக்கத்தில் இடம் பெரும்.
ஏற்கனவே உள்ள கட்டுரையை மேம்படுத்தலாம் அல்லது புதிய தலைப்பிலும் எழுதலாம். முகநூல் தளத்தில் தினமும் மணிக்கணக்கில் நேரம் செலவழிக்கும் நாம், ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு மணிநேரம் ஒதுக்கினால் ஒரு கட்டுரையை எழுதிவிட முடியும். நாம் அனைவரும் மாதத்திற்கு ஒரு கட்டுரையாவது Wikipediaவில் எழுத வேண்டும் என முடிவு செய்து எழுதுவோம் இணைந்து தமிழ் வளர்ப்போம்.

சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு பொன்விழா கண்டது.


43EC854EAC17D32FA5645C191642
சீன தேசிய வானொலியின் தமிழ் ஒலிபரப்பு 1963 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 முதல் இயங்கி வருகிறது. CRI (China Radio International) எனும் சீன வானொலியில் மொத்தம் 56 மொழிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தி, பெங்காலி, உருது போன்ற மொழிகளிலும் நிகழ்ச்சிகள் உள்ளன.

MS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.


இணையத்தில் இருக்கும் பலருக்கும் Microsoft / Windows ஐ தூற்றி பதிவுகள் எழுதுவது சக்கரை சாப்பிடுவது போல் இருக்கும். ஆனால் அவர்களுள் பலரும் தங்களின் தின பணிகளை முழுமையாக Linux / Mac இல் செய்வது இல்லை. இன்றும் பல கணினி விளையாட்டுக்களை விளையாட Windows கணினி அவசியம்.
Open Office போன்ற இலவச Office மென்பொருள் இருந்தாலும் பலருக்கும் MS Office இல் உள்ள வசதிகள் தான் முதன்மையாக உள்ளது. வணிக நிறுவனங்கள் பலவும் Office 360  எனும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் office சேவையை வாங்குகின்றனர்.
ஆஃபீஸ் 360 வாடிக்கையாளர்களுக்காக., iPhone மற்றும் அண்ட்ராய்டு கைபேசிகளில் Word, Excel, Power Point கோப்புகளை பார்க்கவும், புதிதாக உருவாக்கவும் அவற்றிற்க்கான மென்பொருளை Microsoft நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.
Office மென்பொருளை பணம் கட்டி பயன்படுத்தும் வணிக வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி  “குடுத்த காசுக்கு மேல கூவுறான்” என Microsoft ஐ பார்த்து கேட்கும் அளவிற்கு தமது வாடிக்கையாளர்களுக்கு வலிந்து சேவை செய்கிறது Microsoft.

கிரெடிட் கார்டு குடுத்த வங்கியை கதிகலங்கச் செய்த கஸ்டமர்.


கடன் அட்டை கொடுக்கும் எல்லா வங்கிகளும் நம்மிடம் “என்னப்பா மாட்டுக்கு ஒரு கையெழுத்தா? விட்டா மடிக்கு ஒண்ணு வாங்குவீங்க போல” எனும் விதத்தில் கையெழுத்து வாங்குவார்கள். அவர்கள் சொல்லி இருக்கும் பல Terms of Conditions நுணுக்கமாக இருக்கும். இறுதியாக அட்டை தேவையில்லைனு சொன்னா பல புது ரக கட்டணம் எல்லாம் கொடுத்தால் தான் கணக்கை முடிப்பார்கள்.

ரசியாவைச் சேர்ந்த Dmitry Agarkov என்பவர் தன்னைச் சந்திக்க வந்த கடன் அட்டை வழங்கும் “Tinkoff Credit Systems” நிறுவன அதிகாரிகளிடம் நான் சொல்லும் இந்த “Terms & Conditions” க்கு நீங்கள் சம்மதித்தால் உங்களின் கடன் அட்டையை நான் வாங்கிக் கொள்கிறேன் என சொல்லியுள்ளார்.
அண்ணாச்சியின் Terms & Conditions.,
  1. வட்டி விகிதம் ௦% மட்டுமே
  2. அளவில்லாமல் பணம் எடுக்கும் வசதி
  3. மேற்சொன்ன இரு Termsஐ ரத்து செய்ய அல்லது மாற்றம் செய்ய வங்கி விரும்பினால் ஒரு பெரிய தொகையை தண்டமாக எனக்குக் கொடுக்க வேண்டும்.
இவரின் இந்த இடைச் சொருகிய இந்த வரிகளை படித்துப் பார்க்காமல் அந்த வங்கி உயர் அதிகாரி சம்மதம் தெரிவித்து அட்டையை குடுத்துள்ளார்.  இரண்டு வருடம் பயன்படுத்திய பின்னர் இவரின் தில்லு முல்லை அறிந்த வங்கி, அட்டையை ரத்து செய்து அபராததமாக $1,363 கட்டுமாறு சொல்லியுள்ளனர்.
ஆனால் இவரோ, Terms & Conditions படி வங்கி தான் எனக்கு அபராதம் கட்ட வேண்டும் என $727,000 கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாடிக்கையாளர்களை மதிக்காமல் கேப்மாறி (Changing CAP on head., Which means supporting one team cap first and supporting another team by wearing another cap)  வேலை செய்யும் வங்கிகளுக்கு இவர் ஒரு உதாரணம். இது போன்ற வழக்குகளில் பொதுவாக வாடிக்கையாளர் சொல்லும் “Terms & Conditionsஐ முழுமையாக படிக்கவில்லை” என்பதையே இப்போது இந்த வங்கியும் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது.

புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்


தற்போது சந்தையில் இருக்கும் iPhone, iPad மற்றும் பிற Tabletகளில் நாம் பொதுவாகச் சொல்லும் Internal Memory என்பது RRAM , NAND based RRAM எனும் Flash Memory  ஆகும்.
இந்த வகை
Crossbar Chip Design
நினைவகங்களில் சில GBக்கள் அளவு தான் சேமிக்க முடியும். இந்த வகை நினைவகங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு $60 பில்லியன் டாலர்.
தற்போது Internal Memoryயில் ஒரு TB (1 Terra Byte = 1024 GB)  வரை சேமிக்க இயலும் வகையில் Crossbar  எனும் புதிய வகை நினைவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Crossbarஇன் சிறப்பம்சங்கள்:
  • இதன் பரும அளவு மற்ற நினைவகங்களை விட சிறியது.
  • இது பயன்படுத்தும் மின் அளவு 20 மடங்கு குறைவு
  • இதன் நினைவாகக் கொள்ளளவு 200 மடங்கு அதிகமாக இருக்கும்.
  • ஒரு வினாடிக்கு 140GB data வை இந்த Crossbar சிப்பில் எழுத முடியும்.  (Flash Memoryயில் ஒரு வினாடிக்கு 7GB)
உருவாக்கியவர்:  Wei Lu  , இவர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.
Google Glass போன்ற புதிய வகை சாதனங்களிலும் இந்த நினைவகம் பயன்படுத்தப்படுவதன் மூலம் இன்னும் பல வகை வசதிகளை பயணர்களுக்குக் கொடுக்க முடியும்.
Crossbar இதுவரை 100 காப்புரிமைகளுக்கு பதிவு செய்துள்ளது. அதில் 30 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருபது ஊழியர்கள் இருக்கும் Crossbar நிறுவனம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது.  Kleiner Perkins Caufield & Byers, Artiman Ventures, and Northern Light Venture Capital முதலீடு நிறுவனங்கள் சேர்ந்து $25 மில்லியன் முதலீடு செய்துள்ளன.
Crossbar Chip Structure
பொதுவாக இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வர பல வருடங்கள் ஆகும். ஆனால் இந்த Crossbar நினைவங்களை மூன்று வருடத்திலேயே உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என Crossbar நிறுவனத்தின் CEO  George Minassian தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கூகல் போட்டி: பரிசு 12 கோடி ரூபாய்!


இந்தியாவில் கூகல் நிறுவனம் “Google Impact Challenge in India” எனும் போட்டி வைக்கிறது.
பங்கு பெரும் விதிகள்:
  • நீங்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக மட்டுமே போட்டியிட முடியும்.
  • விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடேசி தேதி செப்டம்பர் ஐந்து 2013.
என்ன போட்டி?
ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக சமூக மற்றும் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரு யோசனையை நீங்கள் அனுப்ப வேண்டும்.
அது ஒரு மென் பொருளாகவோ அல்லது ஒரு சிறப்பு வன்பொருளாகவும் இருக்கலாம். ஆனால் உங்களின் யோசனை பொது மக்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும்.
போட்டியில் பங்கு பெற இங்கே சொடுக்கவும்.
எப்படி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக (NGO) பதிவு செய்வது என அறிய இங்கே சொடுக்கவும்.

Black Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது!!!


ஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய “மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்” எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது.

பெரும் தொழில் போட்டியை ஈடு செய்ய இயலாமல் Motorola நிறுவனம் Googleக்கு கைமாறியது நினைவிருக்கலாம். இதே வரிசையில் iPhone, Andoird மற்றும் Windows Phone போட்டியால் Blackberry நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தமது நிறுவனம் பிற நிறுவனங்களுடன் பங்காளியாகவோ அல்லது பிற நிறுவனத் தலைமையின் கீழ் செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது.
தொழிலதிபர்கள் பலரும் Black Berry கைபேசி வைத்திருப்பதை ஒரு சமூக அந்தஸ்தாகக் கருதிய காலம் உண்டு. நான் அம்பானியாகப் போறேன்னு கிளம்பிய பலரும் இந்தக் கைபேசி வாங்குவதை முதல் செயல் திட்டமாக வைத்திருந்தார்கள்.

எந்த நேரத்தில் Apple, Android வந்ததோ அப்போது இதன் புகழ் மங்கியது. புதிதாக வந்த Windows Phone கூட  கடந்த மார்ச் 2013இல் Black berryயை விட அதிக கைப்பேசியை விற்பனை செய்துள்ளது.
இப்போது எந்த நிறுவனங்களால் Black Berryயை வாங்க முடியும் எனப் பார்ப்போம்.
Microsoft தனக்கான ஒரு வன்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை இன்னும் முழுவீச்சில் ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை BBயை வாங்கினாலும் அவர்களின் கைபேசி வன்பொருள் Windows Phone Operating Systemஐ இயக்க முடிவது சாத்தியம் இல்லை.
Samsung வாங்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஆனால் வாங்கினால் எதிர்காலத்தில் அதற்கு மிகவும் உதவும். Google Android கைபேசி விற்பனை தான் Samsungஇன் வருமானம். ஆனால் Google தனக்கே சொந்தமாக Motorola வன்பொருள் தொழிற்சாலை வைத்துள்ளதால் Samsungர்க்கு போட்டியாக Google அதிக கைபேசிகளை விற்பனை செய்யும். ஆதலால் ஏற்கனவே Androidக்கு மாற்றாக குறைந்த விலை கைபேசிகளில் இயங்கும் வகையில் Tizen என்கிற ஒரு கைபேசி இயக்கு தளத்தை Samsung உருவாக்குகிறது. புதிதாக இப்படி ஒரு மென் பொருளை உருவாக்கி சந்தைப் படுத்துவதைத் விட்டுவிட்டு BB இல் ஏற்கனவே நன்றாக இயங்கும் இயக்கு தளத்தை பயன்படுத்தலாம்.
இவை தவிர Lenovo, Huawei & ZTE போன்ற புதிய கைபேசி நிறுவனங்கள் வாங்கலாம்.
யாருமே முழுமையாக வாங்கவில்லை என்றாலும் Black Berry தன்னிடம் உள்ள காப்புரிமைகளை தனித் தனியாக உடைத்து பிற பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஒன்று மட்டும் உறுதி., சந்தைக்கு வந்த அப்றோம் உடனே விலை போக வேண்டும். காலம் செல்லச் செல்ல கேட்கப்படும் விலை குறையும் அதே போல் வாடிக்கையாளர்களும் ஓடிவிடுவார்கள்.

மக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்கும் முகநூல்


அனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது.  கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின் பிரச்னை.
இணைய இணைப்பே இல்லாத மக்களும் குறைந்த விலையில் புதிய இணைய இணைப்பை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் முகநூல் நிறுவனம் Samsung, Ericsson , MediaTek, Nokia, Opera and Quallcomm ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து Internet.org எனும் ஒரு சேவையை துவங்கியுள்ளது.
உலகில் உள்ள இணைய இணைப்பு இல்லாத 5 பில்லியன் மக்களிடம் இணைய இணைப்பை கொடுப்பதே இவர்களின் நோக்கம்.

1. Making access affordable
மலிவு விலையில் கைபேசிகள் உற்பத்தி செய்தல் மற்றும் தொலை தூரத்தில் இருப்பவர்களுக்கும் தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்துவது.
2. Using data more efficiently
தரவு சுருக்குதல் (Data Compression), தன் நினைவுகொள்தல் (data caching) போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் அனுப்பப்படும் தரவுகளை மேம்படுத்துதல்.
3. Helping businesses drive access
அதிக மக்களை இணையம் பயன்படுத்த வைக்கும் நிரலாளர்கள் (Programmers), வன்பொருள் நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஊக்குவித்து வணிக நிறுவனங்கள் தங்களின் வணிகத்தை இணையம் வழியாக மேற்கொள்ள ஊக்குவித்தல்.
கூகல் நிறுவனம் ஏற்கனவே லூன் (Project Loon)  எனும் பெயரில் இணைய இணைப்பு இல்லாத தொலை தூர இடங்களில் ராட்சத பலூன்கள் மூலம் 3G  அலையை வழங்கி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்கா முழுவதும் SMS வழியாக இலவசமாக GMail பயன்படுத்தும் வசதியையும் கொடுத்தது.
Twitter நிறுவனமும் கைபேசி வழியாக Tweet அனுப்புவதார்க்கு மட்டும் இலவசமாக இருக்குமாறு பல சர்வதேச இணைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
Zuckerberg கூறுகையில்  இணைய இணைப்பு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை என்றும் (கல்லூரி விடுதி கண்காணிப்பாளர்கள் கவனத்திர்க்கு) தமது நிறுவனம் 1பில்லியன் டாலர் வரை இணைய இணைப்பு வழங்கும் சேவைகளுக்காக செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்!


ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.
இந்த வேறுபாடுகளை வைத்து அந்தக் கைப்பேசியின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இலியாநஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் Cheng Bo மற்றும் அவரின் நண்பர்கள் Silent Sense எனும் இந்த மென்பொருளை எழுதியுள்ளார்கள்.
இதை நிறுவியது முதல் உங்களின் விரல் அசைவு வேகம், தொடும் அழுத்தம், இழுக்கும் முறை  போன்றவற்றை உள்வாங்கி பதிந்துகொள்ளும்.
100 நபர்களிடம் நடத்திய சோதனையில் இந்த மென்பொருள் 98% அளவில் உரிமையாளரை சரியாகக் கண்டுபிடித்துவிட்டது.
பிற மென்பொருள்கள் மற்றும் விளையாட்டுகள் விளையாடும் போது இந்த மென்பொருள் வேலை செய்யாது. ஆனால் முக்கியமாக மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் போது இது செயல்பட்டு பிறர் பயன்படுத்தாத வண்ணம் காக்கும்.
விரைவில் Silent Sense மென்பொருள் அனைவரின் பயன்பாட்டிற்கும் வர இருக்கிறது.

MicroMax Canvas Tablet ரூபாய் 16500இல் அறிமுகம்


இதுவரை Fun Book எனும் பெயரில் Tablet விற்பனை செய்து வந்த MicroMax நிறுவனம் தற்போது தங்களின் கைபேசி பெயர் Canvas என்ற அடையாளத்தில் Tablet ஒன்றை அறிமுகம் செய்கிறது.
8 அங்குலம் அகலம் கொண்ட திரையுடன் இது பார்க்க Galaxy Tab 3 (311) மற்றும் iPad Mini போல் உள்ளது.
Android 4.2 (Jelly Bean) can be upgraded to new versions
1.2GHz Quad Core Processor
1GB RAM
16GB Internal memory with microSD support upto 32GB
5MP & 2MP(front) cameras
WiFi & 3G Supported
கடைகளில் இது ரூபாய் 16500க்கு கிடைக்கும்.
இந்திய Tablet சந்தையில் சாம்சூங் நிறுவனம் 15.76% பங்களிப்புடன் முதல் இடத்திலும், மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் 13.33% பங்களிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

கைபேசி சந்தை நிலவரம்




சம்ஸூங்:  தங்கத்தால் ஆனா புதிய S4  கைப்பேசியை அடுத்த மாதம் வெளியிட உள்ளது.
நோக்கியா:  மைக்ரோசோப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கி விட்டது., இப்போது ஆறு புதிய கைபேசி வகைகள் வெளி வர இருக்கின்றன.
ZTE: மொசில்லா பயர்பாக்ஸ் இயக்கு தளத்தில் இயக்கும் புதிய Dual Core Processor கைப்பேசியை ZTE விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்




HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.
இலவசமாக இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சிக்கவும்.

மலர்களைக் கக்கும் எரிமலை: சோனியின் விளம்பர யுக்தி.


ஒரு எரிமலையின்  உள்ளே  கோடிக்கணக்கான மலர்களைக் கொட்டி, அவை ஒரு எரிமலை குமுறினால்  எப்படி இருக்குமோ அதே போல் செயற்கையாக வடிவமைத்து தனது புதிய 4K  தொலைக்காட்சிப் பெட்டியை இங்கிலாந்தில் விளம்பரம் செய்துள்ளது சோனி. அந்தக் காணொளியைக்  கீழே பார்க்கவும்.



  <iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/q2DdtkDK7w0?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

<iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/3fZ_QVHUa00?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>

ஸ்நாப் சாட் (Snap Chat)


இதன் செயல்பாடு மிக மிக எளிமையானது. நீங்கள் உங்கள் கைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்து உங்களின் விருப்பமானவருக்கு அனுப்பினால், அவர் அந்தப் படத்தை பார்த்து முடித்த சில வினாடிகளில் அழிந்து விடும். இந்த Snap Chat மென்பொருள் இளையோர் மத்தியில் முகநூலை விட மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. TechTamil கார்த்திக் இப்படிதான் ஏதாவது சொல்லுவான் என நீங்கள் நினைத்தால், இதை படித்துப் பாருங்கள். முகநூல் முதலாளி மார்க் Snap Chat நிறுவனத்தை $3 பில்லியன் டாலருக்கு (18,600கோடி ரூபாய் ) விலை பேசினார். ஆனால் Snap Chat நிறுவனம் உங்கள் பணம் தேவையில்லை என அந்த பேரத்தை நிராகரித்தனர்.

கன்பைடு (Confide)
நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களை படித்து முடித்தவுடன் அவரிடம் கேட்காமலேயே அழித்துவிடும் மென்பொருள் இது. புதிகாக வந்துள்ள இந்த மென் பொருள் snap chat அளவிற்கு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்.


இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.
ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.
அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்.
டயாஸ்போரா (Diaspora)
நான்கு மென்பொருள் வல்லுனர்கள் சேர்ந்து, முகநூலை விட ஒரு பாதுகாப்பான, மற்றும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்களுக்கே முழுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கித் தருகிறோம். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகும் என அறிவித்தனர். ஆனால் அவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் $200,600 தொகையை 6450 பேர் சேர்ந்து இரண்டு வாரங்களிலேயே கொடுத்தனர். இப்போது Diaspora மென்பொருள் இலவசமாக கிடைகிறது., உங்கள் கல்வி, வணிக, அல்லது மக்கள் குழுவிற்காக முக நூலைப் போல ஒரு சமூக வலைதலம் வேண்டும் என்றால் இதை நிறுவி இலவசமாகப் பயன்படுத்தலாம்.

தங்கக் குடம் எப்படி மண் குடமானது?


இத்தனை  கோடி  டாலர்  கொடுத்து வாங்கிய  ஒரு பொருளை , சரோசா  தேவி  பயன்படுத்திய  சோப்பு டப்பா  எனும் அளவில்  சொல்லும் விதமாக  நேற்று  ஒருவர்  Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி    ” திறந்த நிரல் மூல “​ ​ (Opensource) ஆக  வெளியிட்டு  கலவரத்தை  ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்  கிடைக்கும் பொருள்களை வைத்தே  உருவாக்கிய இந்த  பொருளை  யாராலும்  லினக்ஸ்  போல்  மேம்படுத்த முடியும்.
இது  நெஸ்ட்  செய்யும்  அனேக  வேலைகளையும், அதே மாதிரியான  இயக்கு நிரல்  (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே  நாளில்  புதிதாக  மற்ற  நிறுவனங்களால்  உருவாக்கக் கூடிய  ஒரு பொருளை வாங்கி ஒரே  வாரத்தில் மீளாத் தோல்வியில்  துவண்டுள்ளது  கூகள். குறிப்பு : கூகள்  நிறுவனம்  முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக  செய்யவில்லை., அதன் அனைத்து  தயாரிப்புகளும்  விலை கொடுத்து வாங்கி  தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.

​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.


கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​
​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்   (திருடா திருடா படத்தில் வரும் லாரியை  நினைவில் கொள்ளவும்) ​
​ கொடுத்து  வாங்கியது.  TechTamil Karthi
வீட்டில்  தீப்பிடித்தால்  எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்  ஆள்  நடமாட்டம்  இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும்  இந்தப்  பெட்டியை  கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல  சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  அனைத்து  பெரிய  தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களிடம்  இருந்து அதன் அனைத்து  பயனாளர்  விவரங்களை  உளவு  பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம்  வீட்டை கண்காணிக்கும்  ஒரு  பொருளை  நம்  வீடுகளில்  (இப்பொழுதைக்கு  அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா  வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது  அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  மறைமுகமாக யார்  எந்த வீட்டில்  எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை  நாளாக  வீட்டில் இல்லை  போன்ற விவரங்களை சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால்  தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்  என கருத்து  தெரிவிகிறார்கள்.